Thursday, February 24, 2011

பழனிபாபா: விதையாய் விழுந்தவர்!


பழனிபாபா: விதையாய் விழுந்தவர்! ஆளூர்ஷாநவாஸ் கட்டுரை

1988 ஆம் ஆண்டு...
அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது.

கறுப்பர், வெள்ளையர், ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு நடுவே
கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர்.

சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள்.

ஆங்கில இலக்கியங்களைப் பற்றிய அவரது ஆழமான அறிவும்; பைபிளைப் பற்றிய அவரது தெளிவான புரிதலும்; திருக்குர்ஆன் ஒளியில் அமைந்த அவரது பேச்சின் சாரமும் கண்டு அனைவரும் வியந்தனர்.

தனது அறிவாலும், மேடை ஆளுமையாலும் அமெரிக்க மக்களின் அபிமானத்தைப் பெற்ற அவர், 'தவறுகளைக் கண்டு திமிறி எழும்' தனது இயல்பு குணத்தை அங்கேயும் வெளிப்படுத்தினார்.

அமெரிக்கர்களிடையே நிலவும் ஒழுக்கச்சீர்கேட்டையும்,கலாச்சார சீரழிவுகளையும் சுட்டிக்காட்டிய அவர், ஒழுக்கவியல் நிறைந்த வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துரைத்தார். எளிதில் உணர்ச்சிவயப் படக்கூடியவராகவும், முன் கோபக்காரராகவும் இருந்த அவர், தனக்கேயுரிய வேகத்தில் அமெரிக்கர்களைச் சாடியபோதும், அம்மக்கள் அவர் மீது வெறுப்படையாமல், அவரது கருத்தில் இருக்கும் உண்மைகளையும், நியாயத்தையும் உணர்ந்து தங்களைச் சுயபரிசோதனை செய்துகொண்டனர்.

பல்கலைக்கழக நிகழ்ச்சியோடு அவரைத் திருப்பி அனுப்பாமல், பிலடெல்பியா மாகாணம் முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்,அந்தத் தமிழர்.

அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கர்கள் பலர் குடிப்பதை மறந்தார்கள்;
தீய பழக்கங்களை விட்டு விலகினார்கள்; ஒழுக்கவியலை நோக்கி நகர்ந்தார்கள்; இறுதியில் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். தமது ஒரு சுற்றுப்பயணத்திலேயே இப்படியொரு அழுத்தமான தாக்கத்தையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் ஏற்படுத்திக்காட்டிய அந்த இளம் தமிழர் வேறு யாருமல்ல; அவர்தான் புரட்சியாளர் பழனிபாபா.

1997, ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார்.
'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார்.

அவர் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது பெயரை உச்சரிக்கவோ; அவரது பங்களிப்புகளை நினைவு கூரவோ; அவரது தியாகங்களைப் போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை.

இரத்த தான விழாக்களில் மூழ்கிப் போயிருக்கும் இயக்கங்கள், 'முஸ்லிம்களின் இரத்தம் குடித்த இந்துத்துவ மதவெறிக்கு எதிராக காலமெல்லாம் களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு' ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக் கூட எடுக்கவில்லை.

பழனிபாபா என்றால் கலவரத்தை விதைத்தவர்; இளைஞர்களை வழி கெடுத்தவர்; தவறான முன்னுதாரனங்களுக்கு உரியவர் என்றெல்லாம் அவர் குறித்து மோசமான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அவரது பன்முக ஆற்றலை மறைத்து, அவரை வன்முறையாளராகக் காட்டும் புனைவுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகையச் சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும் தயாராக இல்லை.

பாபாவின் பாசறையில் வளர்ந்த 'மக்கள் ஜனநாயகக் கட்சி'யினர் மட்டும் தங்களின் வலிமைக்கேற்றவாறு ஆண்டுதோறும் புதுஆயக்குடியில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஆனால், பாபாவின் பேச்சையும், எழுத்தையும்,சிந்தனையையுமே இன்றைய தமது செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் பெரிய அமைப்புகள் அனைத்தும், அவரை நினைவு கூராமல் தவிர்த்து வருகின்றன.

இன்றைய இயக்கங்களின் பேச்சும், செயல்பாடும், இலக்கும் இன்றைய இயக்கங்களை வழிநடத்தும் தலைவர்களின் சிந்தனையில் உதித்தவை அல்ல.

இன்றைய தலைவர்கள் எதையெல்லாம் பேசுகின்றார்களோ; எந்த செயல் திட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றார்களோ; எந்த இலக்கை நோக்கிப் பயனிக்கின்றார்களோ அவற்றையெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர்; இயங்கியவர்; பயணித்தவர், பழனிபாபா.

முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக மட்டுமே போராடுபவர்கள் என்ற கருத்து நிலவிய காலத்தில்,
1980 களிலேயே வெகுமக்களுக்காகக் குரல்கொடுக்கும் மனித உரிமைப் போராளியாக விளங்கினார், பாபா. பேராசிரியர். கல்யாணி போன்ற மனித உரிமை ஆர்வலர்களுடனும், PUCL போன்ற மனித உரிமை அமைப்புகளுடனும் இணைந்து, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

நுண்ணிய தளங்களில் இந்துத்துவத்திற்கு எதிராக அழுத்தமானப் பதிவுகளைச் செய்து வரும் பேராசிரியர்.அ.மார்க்ஸை இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகம் நன்றி உணர்வோடு பார்க்கிறது. ஆனால் தமிழக முஸ்லிம்களுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் என்றால் யாரென்றே தெரியாத ஒரு காலத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரைச் சரியாக இனம் கண்டு அடையாளப்படுத்தியவர், பாபா. 'இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்' எனும் தலைப்பில் அ.மார்க்ஸ் எழுதிய நூலை வெளியிடுவதற்கு பெரும் துணை புரிந்தார், பாபா.

முஸ்லிம்களோடு உறவாடும் பிற சமய-சார்பற்ற தோழமை சக்திகள் பலர் இருந்தாலும், ஆபத்தான வேளைகளில் முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் அதில் தனிச்சிறப்பு உடையவர்கள் என்பதை பாபா மிகச்சரியாகவே கணித்துள்ளார். பாபாவின் கணிப்பு எவ்வளவு தொலைநோக்குடையது என்பதை, அ.மார்க்ஸின் இடையறாத களப்பணிகளில் இருந்து நாம் உணர்கின்றோம்.

ஜெயலலிதா ஆட்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது, நீதிமன்றம் நடந்து கொண்ட முறை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சங்கராச்சாரியாருக்கு ஆதரவான நீதிபதிகளின் ஒருபக்கச் சார்பு கடும்கண்டனத்திற்குள்ளானது. சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்த நிகழ்வை, பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கணித்து முன்னறிவித்தவர் பாபா.

சங்கராச்சாரியாரைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாபா ஒரு முறை சிறையிலடைக்கப் பட்டார். கைதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் படி பாபாவிடம் பலரும் வலியுறுத்தினர். அப்போது பாபா, 'உயர்நீதிமன்ற நீதிபதி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி எனக்கு நீதி வழங்குவார்' என்று கேள்வி எழுப்பினார். அந்த வகையிலும் பாபாவின் கணிப்பு உண்மையாகிவிட்டதை நாம் நடைமுறையில் கண்டு வருகின்றோம்.
அரசியல் - சமூகப் பணிகளோடு இஸ்லாமிய மார்க்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார், பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்கக் கூட்டங்களில் பங்கேற்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைத் தளத்தில் நின்று தமது இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்துரைத்தார். அதே சமயம் முஸ்லிம்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிரமாக முழங்கினார்.

அவரும் வட்டி, வரதட்சணை, அனாசாரம் போன்ற சமூகக் கொடுமைகளை கடுமையாகச் சாடினார். எனினும், அவர் ஒருபோதும் மார்க்கத்தையும், அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை; முஸ்லிம் ஜமாத்துகளைக் கூறு போட்டதில்லை; ஒரே தெருவில் போட்டியாக இன்னொரு பள்ளிவாசலை உருவாக்கி சமூகத்தில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியதில்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஜமாத்துகளின் ஒருங்கிணைப்பையும், முஸ்லிம்களின் ஒற்றுமையையுமே வலியுறுத்தினார்.

பாபாவின் இதழியல் மற்றும் எழுத்துப் பணிகளும் அவரது தொலைநோக்குக்கு சான்றாக விளங்குகின்றன. கிறிஸ்தவம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட பாபா, 'பைபிள் ஒரு ஆய்வு' என்னும் நூலை வெளியிட்டார். கிறிஸ்தவ பாதிரியார்களுடன் விவாதங்களிலும் ஈடுபட்டார். அது கிறிஸ்தவத்திலும், பைபிளிலும் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. 'ராமகோபாலைய்யருக்கு மறுப்பு' எனும் தலைப்பில் பாபா எழுதிய நூல் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதினார், பாபா.

'புனிதப் போராளி', 'அல்-முஜாஹித்', 'முக்குல முரசு' போன்ற பத்திரிகைகளை நடத்திய பாபா, அவற்றில் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும், அரச அடக்குமுறைகளையும் 'புனிதப் போராளி' மூலம் அம்பலப்படுத்தினார்.
இவ்வாறு, மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு; பேராசிரியர்.அ.மார்க்ஸ் போன்றவர்களுடன் நட்பு; மூட நம்பிக்கை எதிர்ப்பு; சமூகத் தீமைகள் ஒழிப்பு; நூல்கள் மற்றும் இதழ்கள் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளைப் பேசும் ஊடகப் பங்களிப்பு ; பிற சமய அறிஞர்களுடனான உரையாடல் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணி என எந்த செயல் திட்டங்களின் அடிப்படையில் பாபா இயங்கினாரோ, அவை அனைத்தையும் ஒன்று விடாமல் காப்பியடித்து, இன்றைய முஸ்லிம் இயக்கங்கள் இயங்கி வருவதையும், செயல் திட்டங்களைக் கற்றுத்தந்த பாபாவை மட்டும் மறந்து விட்டதையும் இன்று காண்கின்றோம்.

பாபாவின் சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் கடமையிலிருந்து இயக்கங்கள் தவறி விட்டாலும், இளைஞர்கள் தவறமாட்டோம் என்பதை எடுத்துரைக்கவே பாபாவை மறுவாசிப்பு செய்கின்றோம். ஏனெனில், பாபா இளைஞர்களைத்தான் அதிகம் நம்பினார். இளைஞர்களையே மிகவும் விரும்பினார். 'வரலாறு என்னை விடுதலை செய்யும், வரும்காலம் என் சார்பில் வஞ்சமெடுக்கும்' என்று மேடைகள் தோறும் முழங்கினார். நமக்காக முழங்கியவரை, நமது விடியலுக்காக ஏங்கியவரை நினைவு கூராமல் விட்டால் அது நன்றி கொன்றதாக ஆகிவிடும். ஆகவே, பாபாவை அறிந்து கொள்வோம். அடுத்த தலைமுறைக்கும் அவரை எடுத்துச் செல்வோம்.

1950 நவம்பர் 14 ஆம் நாள், என்.வி.முஹம்மது அலி - கதீஜா பீவி தம்பதியருக்குமகனாகப் பிறந்தார் பழனிபாபா. அஹமது அலி என்பது இயற்பெயர். ஆனால், 'பழனிபாபா' என்ற அடைமொழியே பின்னாளில் அவரது பெயராக மாறிப்போனது. பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம் தான் பாபாவின் தாய் வழிப் பூர்வீகமாகும். பாபாவின் தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சார்ந்தவர். ஊட்டியில் உள்ள ஆங்கிலப்பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும், பெற்றோரின் மறைவுக்குப் பின் புது ஆயக்குடியில் உள்ள தாய்மாமா அப்துல் ரஹ்மான் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

பழனி ஆண்டவர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பாபா, கல்லூரி நாட்களிலேயே பொது வாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். புது ஆயக்குடியில் நைனா முகம்மது என்பவர் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்லீக் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியதுதான் பாபாவின் முதல் மேடை அனுபவமாகும்.

கிறிஸ்தவப் பள்ளிக் கூடத்தில் ஆங்கில வழிக்கல்வி பயின்றதனால் ஆங்கிலப் புலமை மிகுந்தவராகப் பரிணமித்தார் பாபா. எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராகவும்; நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து பார்க்கும் அறிவுடையவராகவும்; துணிவையும், மனோ தைரியத்தையும் இயல்பாகக் கொண்ட தன்னம்பிக்கை மனிதராகவும் சிறந்து விளங்கிய அவர், அத்தகைய பிறவி குணத்தால் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தார்.

இந்துத்துவ எதிர்ப்பு; சிறுபான்மையினர் பாதுகாப்பு; உழைக்கும் வர்க்கச் சார்பு; முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வு; ஒடுக்கப்பட்டோர் அரசியல் விடுதலை; இஸ்லாமிய கருத்தியல் குறித்த பரப்புரை என தனது கொள்கைகளை வரையறுத்துக் கொண்ட அவர், அக்கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தீவிரமாக களமாடினார். தமிழகத்தில் அவர் பயணிக்காத கிராமங்களே இல்லை. தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் வலம் வந்தார். இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என நாடு நாடாகச் சுற்றினார். அவ்வாறு அவர் சென்ற இடமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

பாபாவின் தனித் திறமைகளினாலும், நாவண்மையினாலும் ஈர்க்கப்பட்ட அரசியல் தலைவர்களும், சமூக சிந்தனையாளர்களும் அவருக்கு நெருக்கமானார்கள். இந்திராகாந்தி முதல் எம்ஜிஆர் வரை எல்லா அரசியல்வாதிகளுடனும் பாபாவுக்குத் தொடர்பு இருந்தது. டாக்டர் ராமதாஸ் முதல் டாக்டர் சேப்பன் வரை எல்லா சமூகத் தலைவர்களுடனும் அவருக்கு உறவு இருந்தது. அ.மார்க்ஸ் முதல் அனீஸ் பாத்திமா [நர்கிஸ்] வரை எல்லா சிந்தனையாளர்களுடனும் அவருக்கு நட்பு இருந்தது.

பாபா, ஒரு பன்முக ஆளுமை. அநீதியைக் கண்டு ஆர்த்தெழும் இயல்பைக் கொண்டவர்.தவறுகள் எங்கே நடந்தாலும் தன் சட்ட ஞானத்தால் தட்டிக்கேட்டவர். இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பிராமணரான ஆர்.வெங்கட்ராமன் தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். தமது தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்காக மக்கள் பணத்தை விரயமாக்கிய ஆர்.வியின் செயலை கடுமையாகக் கண்டித்த பழனிபாபா, 'வெங்கட்ராமன் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்குத் திருப்பி செலுத்த வேண்டும்' என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப்படி அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக ஒலித்த பாபாவை நாடே திரும்பிப் பார்த்தது.

1980 களில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தொடர்ந்து குமரிமாவட்டம் மண்டைக்காட்டில் நடைபெற்ற கலவரம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வரவை அறிவிப்புச் செய்தது. 'இந்து முன்னணி' என்ற மாற்றுப் பெயரில் களமிறங்கிய இந்துத்துவ சக்திகள், அமைதிப்பூங்காவான தமிழகத்தை அமளிக்காடாக்கினர். விநாயகர் ஊர்வலத்தை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். 'காமவெறியில் விஞ்சி நிற்பவள் கதீஜாவா? அன்னை மேரியா? மணியம்மையா?' என்ற தலைப்பில் பட்டிமன்றங்களை நடத்தினர். முஸ்லிம்களின் உயிருக்கு உயிரான நபிகளாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து வெறிக்கூச்சலிட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இத்தகைய அராஜகச் செயல்களால் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது. கோவை, விழுப்புரம், ஆம்பூர், தேவிப்பட்டினம், ஆத்தூர், சேலம், வாணியம்பாடி, தேங்காப்பட்டினம், திண்டுக்கல், குளச்சல், காயல்பட்டினம், கடையநல்லூர், திருவல்லிக்கேணி, மேட்டுப்பாளையம், பழனி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, அத்திக்கடை, மேலப்பாளையம், நாகூர் என்று... எங்கு பார்த்தாலும் கலவரம். இந்துத்துவ வெறியர்களின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகிய முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்தகைய இருண்ட சூழலில் ஒளிக்கீற்றாய் உதித்தவர்தான் பழனிபாபா.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அராஜகங்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய சமூகத்திற்கு தைரியமூட்டினார், அவர்.
பேசவே பயந்து வாய் பொத்தி ஊமையாய்க் கிடந்த சமூகத்திற்கு கேள்வி கேட்க கற்றுத் தந்தார். இந்து முன்னணியின் மதவெறிக் கூட்டங்களுக்கு எதிர் கூட்டம் போட்டு தமது அபாரமான பேச்சுத் திறனால் தக்க பதிலடி கொடுத்தார். அவர் கலவரத்தை விதைத்தவர் இல்லை; கலவரத்தை விதைத்தவர்களுக்கு எதிரான கருத்தை விதைத்தவர்.

இந்துத்துவ மதவெறிக்கு எதிராக களமாடிய அதே வேளையில், முஸ்லிம்களை ஒடுக்கிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வீச்சோடு இயங்கினார், பாபா. முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளை துணிந்து அம்பலப்படுத்தி வந்த அவர், இடையறாத சட்டப் போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் மிரள வைத்தார். அச்சத்தின் பிடியிலிருந்த முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

பாபா மீது நான்கு முறை தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட முறை சிறை சென்று வந்த அவர், எல்லா ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்தார். தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும், இந்தியாவிலேயே கைது செய்யப்பட முடியாத ஒரே மனிதராகவும் அவர் இருந்தார்.

இந்துத்துவ கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஜனநாயகத் தளத்தில் நின்று எதிர்கொள்ளும் வகையில், பாபா உருவாக்கிய மக்கள் திரளைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினார்கள் இந்து முன்னணியினர். பாபாவின் படையை நேருக்கு நேராகச் சந்திக்கும் துணிவற்ற அவர்கள், அதிகாரத்தின் துணையை நாடினார்கள். பாபாவின் பின்னால் அணிவகுத்த இளைஞர்கள் மீது அடக்குமுறைச் சட்டம் பாய்ந்தது. பாபாவின் ஆதரவாளர்கள் குறிவைக்கப்பட்டனர்; கண்காணிக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியான உதவிகளைச் செய்தார், பாபா. சிறையிலிருந்த முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து அந்த குடும்பங்களின் செலவினங்களுக்கு மாதந்தோறும் மணியார்டர் செய்து வந்தார். பாபாவின் இத்தகைய குணச்சிறப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவர் மீது அபிமானம் கொண்டனர். பாபாவின் படை மேலும் வலிமை பெற்றது.

இந்துத்துவத்தை தனியொரு சமூகமாக நின்று எதிர்க்க முடியாது என்ற நடைமுறை உண்மையைப் புரிந்து கொண்ட பாபா தொடர்ச்சியாக பல வியூகங்களை வகுத்தார். இந்துத்துவத்தால் பாதிக்கப்படும் ஏனைய சமூகங்களையும் இணைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மண்டல் கமிஷனை ஒழித்தது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை எதிர்க்க பிற்படுத்தப்பட்டவர்களே வாருங்கள் என 'டச்சிங்காக' அழைப்பு விடுத்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் ஊருக்கு வெளியே சேரியில் ஒதுக்கி வைத்து வதை செய்கின்றது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை வேரறுக்க தலித் மக்களே அணிதிரள்வீர் என உணர்வுப் பூர்வமாக அறைகூவல் விடுத்தார்.

அத்தகைய அறைகூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும், தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும் உறவை வளர்த்துக் கொண்டார். வன்னியர் சமூகத் தலைவரான டாக்டர் ராமதாசுடனும், தலித் சமூகத் தலைவரான டாக்டர் சேப்பனுடனும் இணைந்து களம் கண்டார்.

வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக ராமதாஸ் மாற்றிய போது, பா.ம.கவுக்கு ஒரு வெகுஜன அடையாளத்தைப் பெற்றுத் தந்தவர் பழனிபாபா. தனது ஜிகாத் கமிட்டித் தொண்டர்களை பாமகவில் இணைந்து செயலாற்றும் படி ஊக்கப்படுத்தினார். அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பாமகவில் இணைந்தார்கள்.

அவ்வாறு இணைந்தவர்கள் பட்டி தொட்டியெங்கும் பா.ம.க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அந்த கூட்டங்களில் பங்கேற்று பழனிபாபா முழங்கினார். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கை நாயகனாக ராமதாசை முன்னிறுத்தினார். வன்னியர் சாதிக்கட்சி என்ற முத்திரையிலிருந்து விலகி, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக பா.ம.கவை அடையாளப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்தார்.

பா.ம.க படிப்படியாக வளர்ந்து அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ராமதாசின் அரசியல் நடவடிக்கைகளில் மெல்லிய மாற்றங்களும் நிகழ்ந்தன. அறிவுக் கூர்மையுள்ள பாபா அதை உணர ஆரம்பித்தார். ராமதாசிடம் ஏற்பட்ட மெல்லிய மாற்றம் ஒரு கட்டத்தில் வலிமையாக வெளிப்பட்டது. பா.ம.க கூட்டங்களில் பாபா பேசிய பிறகு இறுதியாக ராமதாஸ் பேசுவார். பாபாவின் அனல் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் திரண்டு நிற்பவர்கள், அவர் பேசி முடித்ததும் கலைந்து சென்று விடுவார்கள். ராமதாஸ் பேசத் தொடங்கும் போது கூட்டம் சில நூறு பேர்களாகச் சுருங்கி விடும். இதுவும் ஒரு வகையில் ராமதாசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. விளைவு; பாபாவை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள் என பா.ம.கவினருக்கு ராமதாஸ் வாய்மொழி உத்தரவு போட்டார். பாபாவுக்கும் ராமதாசுக்கும் இடையே முரண்பாடு மேலும் அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் பால்தாக்கரேயை ஆதரித்து அறிக்கை விட்டார் ராமதாஸ். மேலும் பாஜக தலைவர்களுடன் நெருங்கத் தொடங்கினார். ராமதாசின் கொள்கைத் தடுமாற்றத்தைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்த பாபா தனது தொண்டர்களிடம், 'முஸ்லிம்கள் பா.ம.கவில் இருக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது' என வெளிப்படையாகக் கூறினார். பின்னர் அதையே மேடைகளிலும் எதிரொலித்தார்.

1996, சட்டமன்றத் தேர்தலின்போது, புதுக்கோட்டைத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராகப் போட்டியிட்ட கே.எம்.ஷெரீபை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாபா, 'இதுதான் பிற அரசியல் கட்சிக்காக, தாம் பேசுகிற கடைசி பேச்சு என்றும், இனி எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு கேட்க மாட்டேன் என்றும், எதிர்காலத்தில் சமுதாயத்திற்காகவே ஓட்டு கேட்பேன்' என்றும் அறிவிப்பு செய்தார். பா.ம.கவினால் பாபாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், தனியொரு அரசியல் கட்சியைக் கட்டமைக்கும் சிந்தனைக்கு அவரைத் தள்ளியது.

எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியலை எப்படி வென்றெடுப்பது என்ற ஆய்வில் இறங்கினார். இறுதியில், கேரளாவுக்குச் சென்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் [பிடிபி] தலைவர் அப்துல் நாசர் மதானியை சந்தித்தார். அங்கு முஸ்லிம்களையும், தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்த அரசியல் வியூகத்தின் மூலம் வலுவான ஜனநாயக சக்தியாக எழுச்சி பெற்றிருந்த மதானியுடனான பாபாவின் சந்திப்பு, அவருக்குப் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியது.

முஸ்லிம்களையும், தலித்துகளையும், அரசியல் மைய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாக மாற்றும் வகையில் தமிழகத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தொடங்கும் முடிவுக்கு வந்தார் பாபா. தமிழகத்தில் பி.டி.பியை தொடங்கும் முன்னர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுடன் கலந்தாலோசிக்குமாறு பாபாவிடம் கேட்டுக் கொண்டார், மதானி.

பாபா கொடிக்காலை சந்தித்தார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு பற்றி விவாதித்தார். பாபாவின் முடிவுகளை மகிழ்ச்சியோடு வரவேற்றார் கொடிக்கால். பின்னர் ஜிகாத் கமிட்டியினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், கேரளாவின் பி.டி.பி கட்சியை தமிழ்நாட்டில் தொடங்குவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன. முடிவில் மதானியின் அரசியல் அஜெண்டாவை ஏற்றுக்கொள்வது என்றும், ஜிகாத் கமிட்டியையே அரசியல் கட்சியாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கட்சியைப் பதிவு செய்வதற்கும், கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும், கிளைகளை விரிப்பதற்கும் பணிகளை முடுக்கி விட்டார், பாபா. தனது பேச்சில் இருந்த வேகத்தைக் குறைத்து, வியூகத்தை கூர்தீட்டினார். தமிழகம் முழுவதுமுள்ள முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். பாபாவின் அத்தகைய முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைத்தது. பல மாவட்டங்களில் ஜமாத்துகள் ஒருங்கிணையத் தொடங்கின.

முஸ்லிம்களை ஒருங்கிணைப்பது; தலித்துகளுடன் உரையாடுவது; இரண்டு சமூகங்களும் இணைந்து அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது என்ற வியூகம்தான் பாபா கையிலெடுத்த கடைசி ஆயுதம். எதிர்காலத்தில் கட்சிகளின் கூட்டமைப்பு வலுவிழந்து விடும் என்றும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்புதான் வலுப்பெறும் என்றும் பாபா கூறி வந்தார். அத்தகைய கூட்டமைப்பை உருவாக்குவது சாதாரண வேலையல்ல என்றும், அது மிகப்பெரும் அர்பணிப்புக்குப் பின்னரே சாத்தியமாகும் என்றும் அவர் முன்னுணர்ந்தார்.

இத்தகைய அரசியல் நிலைப்பாட்டுடன் களப்பணியை நோக்கி பாபா நகரும் போதுதான் திடீரென படுகொலை செய்யப் பட்டார்.

1997, ஜனவரி 28 ஆம் நாள் இரவு பொள்ளாச்சியில் உள்ள பாபாவின் நண்பர் பசுவராஜ் என்கிற தனபால் வீட்டிற்கு பாபா சென்றார். 30 ஆண்டுகால நண்பரான தனபாலோடு சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட, குடும்ப விசயங்களைப் பற்றி உரையாடிவிட்டு இரவு 9.30 மணியளவில் அங்கிருந்து விடைபெற்றார். புறப்படுவதற்கு பாபா தனது ஜீப்பில் ஏறி அமர முயன்ற போது, கையில் சிறிய கோடாலி போன்ற ஆயுதத்துடன் பாபாவை நெருங்கிய அந்த மர்ம மனிதன், திடீரென பாபாவின் தலை,நெஞ்சு,உடல் என சரமாரியாக வெட்டினான். பாபா நிலைகுலைந்து சாய்ந்தார்.
அதிர்ச்சியடைந்த பாபாவின் நண்பர் தனபால், 'டேய் டேய்' என சத்தமிட்டுக் கொண்டே அந்தக் கொலைகாரனை விரட்டினார். அப்போது அவன் 'நீ எனக்கு குறி இல்லை, போடா ஒதுங்கி' என அவரைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். சற்று தூரத்தில் நின்றிருந்த அம்பாசிடர் கார் ஒன்றில் தொற்றிக் கொண்ட அவன் தப்பித்து விட்டான்.
பாபா படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆங்காங்கே கலவரம், கல்வீச்சு, கறுப்புக் கொடி போராட்டம் என எதிர்ப்பு வலுவாக இருந்தது. கனத்த இதயத்தோடும், கண்ணீர் பெருக்கோடும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் திரளுக்கு மத்தியில், பழனி அருகேயுள்ள புது ஆயக்குடியில் பாபாவின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.
பாபாவின் படுகொலையில் தொடர்புடைய கொலையாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட்டனர். பாபா கொலை வழக்கை முன்னெடுப்பதற்கும், கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதற்கும் உருப்படியான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.

பாபாவின் ஆதரவாளர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது 'கைது செய்யப் பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல' என்றும், அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், பாபா படுகொலைக்குப் பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் இருக்கின்றன என்றும் கூறி அதிர்ச்சியளிக்கின்றனர். அது என்ன மர்ம முடிச்சு என்பதை நம்மால் விளங்க முடியவில்லை.

ஆனால், அவரது படுகொலைக்குப் பின்னால் இருக்கும் அரசியலை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பாபா, இந்துத்துவ மதவெறிக்கு எதிராக மிகத் தீவிரமாக சொற்போர் நிகழ்த்திய காலங்களில் கொல்லப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி மக்களை அணி திரட்டிய காலத்திலும் கொல்லப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களோடு இணைந்து அவர்களின் அரசியல் அமைப்பை வலுப்படுத்த உழைத்த காலங்களிலும் படுகொலை செய்யப்படவில்லை.

மாறாக, எப்போது அவர் பேச்சைக் குறைத்து, செயல் வீச்சை அதிகரித்து, ஜமாத்துகளை ஒருங்கிணைத்து, முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் பயணத்தை முன்னெடுக்க முயன்றாரோ அப்போதுதான் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அப்படியென்றால், எந்த முயற்சி வெற்றி பெறுமோ; எந்த முயற்சி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விடிவைத் தருமோ; எந்த முயற்சி முஸ்லிம்களுக்கு உரிய பயனளிக்குமோ...அந்த முயற்சியில் அவர் ஈடுபட முயன்றபோதே கொல்லப்பட்டு விட்டார் என்றால், அதன் பின்னணியில் இருக்கின்ற 'அரசியல்' எது என்பதை ஆய்வு செய்தாக வேண்டும்.

இந்துத்துவத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு இலக்காகின்ற இரட்டைச் சமூகமான முஸ்லிம்களும், தலித்துகளும் இணைவது இயல்பாகவே சாத்தியமானது. இரு சமூகங்களுக்குமான உறவு இரண்டறக் கலந்தது. இரண்டு சமூகங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுக்கு உரியது. சரியான தலைமைகள் இன்றித் தடுமாறும் நிலைமையை உடையது. நாடு முழுவதும் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும், மக்கள் தொகை அடிப்படையில் ஒருங்கிணைந்த மிகப்பெரிய சமூகங்களாகவும் இருப்பதால், இரண்டு சமூகங்களையும் இணைத்த அரசியல் நடவடிக்கை என்பது இரண்டு சமூகங்களையும் தவிர மற்ற எல்லோருக்கும் சிக்கலானது. இரண்டு சமூகங்களையும் வஞ்சித்து அரசியல் பிழைப்பு நடத்தும் அனைவருக்கும் ஆபத்தானதும் கூட.

எனவே, அந்த இணைப்பு அஜெண்டாவை கையிலெடுப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாவார்கள். அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அவர்கள் அகற்றப்படுவார்கள்; அல்லது அழிக்கப்படுவார்கள்.

கேரள மாநிலத்தில், முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் அஜெண்டாவை கையிலெடுத்த மதானி, பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அகற்றப்பட்டார். அதே வழிமுறையை தமிழகத்தில் கையிலெடுக்க முயன்ற பழனிபாபா அழிக்கப்பட்டார்.

பாபாவின் மறைவுக்குப் பிந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியல் போக்கு, இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்தால் அந்த உண்மை நமக்கு விளங்கும்.

பழனிபாபா, தனது பொதுவாழ்க்கைப் பயணத்தில் முதலில் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தார். பின்னர் அதே எம்ஜிஆர்தான் தமது ஆட்சிக்காலத்தில் பாபாவின் கூட்டங்களுக்குத் தடை போட்டார். ஒவ்வொரு தடையையும் நீதிமன்றத்தில் சென்று அனாயாசமாகமுறியடித்து, வெற்றிகரமாக கூட்டம் நடத்துவார், துணிச்சல்கார பாபா. இதனால் எரிச்சலடைந்த எம்ஜிஆர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணை கொண்டு வந்தார்.

பாபாவுக்கும், எம்ஜிஆருக்கும் இடையிலான முரண்பாட்டைக் கவனித்த கலைஞர், எம்ஜிஆரை எதிர்க்க பாபாவை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் கலைஞருடனும் முரண்பட்டார் பாபா. எம்ஜிஆராவது பாபாவின் கூட்டங்களுக்குத் தான் தடை போட்டார். ஆனால் கலைஞரோ, பாபாவைக் கைது செய்து சிறையிலடைக்கும் அளவுக்கு கடுமை காட்டினார்.
இறுதியில், டாக்டர் ராமதாசோடு நெருங்கிய பாபா, அவரோடும் முரண்பட்டு விலகினார்.

பழனிபாபா, எம்ஜிஆரையும் கலைஞரையும் ராமதாசையும் சமுதாயத்திற்காகவே ஆதரித்தார்; சமுதாயத்திற்காகவே எதிர்த்தார். சுயநல அரசியலையோ, அல்லது பிழைப்புவாத அரசியலையோ அவர் முன்னெடுத்திருந்தால் எந்தத் தலைவரோடும் அவருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது. யாரோடும் சமரசமாகி விடாமல் அவர் காத்த கொள்கை உறுதிதான் அவரை தனித்து இயங்க வைத்தது; ஷஹீது அந்தஸ்துக்கு உயர்த்தி வைத்தது.

பாபா மிக இயல்பானவர்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். மனதில் பட்டதை பட்டெனச் சொல்லிவிடும் பழக்கமுடையவர். இன்றைய அரசியல் சமூகத் தலைவர்களுக்கு உரிய, இன்றைய அரசியல் சூழலுக்கு மிகவும் அவசியமான 'நடிக்கும் திறன்' பாபாவிடம் இருந்ததில்லை. அவர் வெள்ளந்தியான மனிதராக இருந்தார்.

பாபாவின் உழைப்பை அவரோ அல்லது அவரது இயக்கமோ அறுவடை செய்யவில்லை. உழைப்பைத்தான் அறுவடை செய்யவில்லை; அவரது இறப்பையாவது அவரது இயக்கம் அறுவடை செய்ததா எனில் அதுவும் இல்லை. அவரது இறப்புக்குப் பிறகு அவரது இயக்கமே இல்லை என்ற நிலையாகி விட்டது.

பாபாவின் இறப்பை அறுவடை செய்தவர்கள் யாரென்றால், பாபா வாழும் காலம் வரை அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் என்பதுதான் மிகப்பெரும் கொடுமை.

பாபாவை, பெண்பித்தர் என்றும், பாபா, முஸ்லிம் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்றும் குற்றம் சாட்டி அவருக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டவர்கள்தான் அவரது இறப்பை பக்கம் பக்கமாக செய்தியாக்கி, முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேற்றி இயக்கம் வளர்த்தார்கள். பாபாவின் உண்மையான சமூகப் பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்தார்கள்.

ஆனால், பாபாவுக்கு 'ஷஹீது' என்னும் மிகப்பெரிய கண்ணியத்தை வழங்கிய இறைவன், அவர் மீது அவதூறு பரப்பிய தறுதலைகளையோ அசிங்கப்படுத்தினான்.

பாபா, இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று எந்த மனிதர் பாபா மீது அவதூறு வீசினாரோ, அந்த மனிதரைப் பற்றித்தான் 'எங்களை வழிகெடுத்தார் ; எங்களை குண்டுவைக்கத் தூண்டினார்' என்று சிறை மீண்ட இளைஞர்களைப் பேட்டி கொடுக்கச் செய்தான் இறைவன்.

பாபாவை, பெண்பித்தர் என்று யார் விமர்சித்தார்களோ, அவர்களே ஒருவர் மீது ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அசிங்கப்பட்டு, தனித்தனி இயக்கம் காணும் அளவுக்கு அம்பலப்படுத்தினான், இறைவன்.

'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பதெல்லாம் வழக்கொழிந்து போன பழமொழியாகிவிட்டது. 'தெய்வமும் அன்றே கொல்லும்' என்பதுதான், பாபாவை எதிர்த்தவர்களுக்கு ஏற்பட்ட இழி நிலையிலிருந்து நமக்குத் தெரியவருகிறது.

பாபா, தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் தவறாமல் ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பார். ''I Plead Guilty - நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்''.

அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகளின் அராஜகம் பாயும் போது அதை தட்டிக் கேட்பது அயோக்கியத்தனம் என்றால், நான் மிகப்பெரும் அயோக்கியனே!

முஸ்லிம்கள் மீது திராவகம் வீசப்படுவதை தடுக்கப் போனது தீவிரவாதம் என்றால் நான் மாபெரும் தீவிரவாதியே!

ஜனநாயக உரிமைகளைக் கேட்பது சாதிவெறி என்றால் நான் மாபெரும் சாதி வெறியனே!

சகோதரத்துவம் போற்றுவது, சட்டவிரோதம் என்றால் நான் சட்ட விரோதியே!

இஸ்லாத்தின் மாண்புகளை கூறுவது மதவெறி என்றால் நான் மாபெரும் மதவெறியனே!

என் மக்கள் மீது ஏவப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடுவது குற்றம் என்றால் நான் மிகபெரும் குற்றவாளியே!'' என்றார் பாபா.

அவர் எந்தக் குற்றத்தை இழைத்தாரோ...
அந்தக் குற்றத்தை நாமும் இழைப்பதுதான்
அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்க முடியும்!

[சமநிலைச் சமுதாயம் பிப்ரவரி - 2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]

Monday, January 31, 2011

Triplicane Big Mosque



Location 

The Big Mosque has been erected in the Triplicane area of Chennai. The place constitutes one of the best mosques in the capital of Tamil Nadu state. The city of Chennai makes up one of the four metropolitan cities of India. The mosque is located a little away from the Queiad-e-Milleth High Road. For further reference, the mosque lies in the vicinity of Jam Bazar in Triplicane.

Overview 
The Big Mosque was built in the year 1795 and is one amongst the historical monuments of Chennai. The mosque was built by Walajah Family and that is why it is often referred as the Walajah Big Mosque. The mosque was built in the memory of the Nawab. 

Features 
The Big Mosque is not as big as it is strong. Built with the grey granite, the mosque has been surviving the ravages of the time. The great mosque is provided with two lofty minarets at the front. The architecture is typically medieval. Iron works have been altogether avoided in the construction of the mosque.

Wednesday, December 1, 2010

மாவீரன் திப்புசுல்தான் : இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி !


1799 ஆண்டு மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.
அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவ‌ர்க‌ள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.
1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.
இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான்.
போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.
எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர். திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது தி ப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்த ு ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.
இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால� �� வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்

அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர ்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு

‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்ச� ��்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வ� �ை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் � �ன்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு க ட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவக ரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.”
மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!
கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்

திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ‘திப்புவின் சமயக் கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்து� ��் கொண்டனர்’ என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்� ��ைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.

திப்புவின் விவசாயக்கொள்கை

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.
சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதி� ��் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போர்களத்தில் நேர்மை
 
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் � �ுதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”

மக்கள் சக்தியை திரட்டியவர்

ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்”.என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

திப்புவை மாவீரனாக மாற்றியது எது?

இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.

உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.

திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது. ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது.

கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை. 

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிககை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ’கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார். 

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனை கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.

அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும் . அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்
Article taken from முத்துப்பேட்டை - http://muthupet.org